AK 62 : அஜித்துக்கு ஜோடியாகும் கமல் பட நடிகை.? அட இவரா.. சும்மாவே கிளாமர் காட்டுவாரே

ajith
ajith

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தனது ரசிகர்களை மகிழ்விக்க வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த வலிமை, துணிவு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் இணைந்து தனது 62வது படத்தில் நடிக்க உள்ளார். முதலில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இந்த படத்தை இயக்க இருந்தது ஆனால் அவர் சொன்ன கதை சொல்லும் அளவிற்கு சிறப்பாக இல்லாததால் லைகா நிறுவனம் அவரை வெளியேற்றிவிட்டு வெற்றி இயக்குனர் மகிழ் திருமேனியிடம் தஞ்சம் அடைந்துள்ளது.’

அவரும் AK 62 படத்தை தரமாக கொடுக்க நல்ல கதையை உருவாக்கி வருகிறார். வெகு விரைவிலேயே இதற்கான அறிவிப்பு வெளிவந்து உடனே ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் 62 திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையதளப் பகங்களில் உலாவுகிறது.

அதன்படி ஏகே 62 படத்தின் நாயகி யார் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏகே 62 படத்தின் ஹீரோயின்னாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது இவர் ஏற்கனவே வினோத் படமான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல பெயரை வாங்கினார்.

இவர் காதல், செண்டிமெண்ட் போன்ற சீன்களில்  சிறப்பாக நடிக்க கூடியவர் என்பதால் நிச்சயம் இந்த படம் அவருக்கு ஒரு நல்ல படமாக இருக்கும் என கூறப்படுகிறது. எந்த அளவிற்கு நன்றாக நடிக்கிறாரோ அதே அளவிற்கு  கிளாமரும் காட்டக்கூடியவர். ஆனால் AK 62 படத்தில் கிளாமர் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கா.. இல்லையா.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..