Rajini : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் இப்படிப்பட்ட ரஜினி கமல் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் ஆனால் திரை என்று வந்துவிட்டால் மோதிக் கொள்வது வழக்கம் அப்படி பல தடவை மோதிக் கண்டுள்ளனர்.
ரஜினி ஒரு வெற்றி படத்துக்கு கொடுத்தால் உடனே கமல் அதைவிட மிகப்பெரிய ஒரு வெற்றிப் படத்தை கொடுப்பார். கமல் ஒரு வெற்றி கொடுத்தால் அதைவிட பெரிய வெற்றி ரஜினி கொடுப்பார் இதுபோல இருவரும் மாறி மாறி சம்பவம் பண்ணி வந்தனர். மேலும் இருவருமே மாறி மாறி பாராட்டி கொள்ளவார்கள்..
அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை தான் ரஜினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.. கமல் நடித்த நாயகன் திரைப்படம் வெளியாகி சக்கபோடு போட்டது இந்த படத்தை ரஜினி பார்த்துவிட்டு கமலை தொலைபேசியில் அழைத்து கமல் மூணாவது ரவுண்டுல இருக்கேன் ஆனா இந்த போதையை விட வேலு நாயக்கர் போதை அதிகமாக இருக்கிறது என சொன்னாராம்..
அதுபோல கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் பெரிய வெற்றியை பெற்றது. அபூர்வ சகோதரர்கள் படம் குறித்த ரஜினி ஒரு விழாவில் பேசியது.. அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்துவிட்டு இப்படி ஒருவரால் நடிக்க முடியுமோ என வியந்து போனேன் கமல் அதை எப்படி செய்தார் என யோசிக்கவே முடியவில்லை ஏனெனில் இப்பொழுது போலவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் அப்பொழுது கிடையாது.
படத்தை பார்த்துவிட்டு கமலை உடனே பார்க்க வேண்டும் என்றேன் அப்பொழுது இரவு இரண்டு மணி அவரின் மேனேஜர் இந்த நேரத்தில் பார்க்க வேண்டுமா? என கேட்டார் நான் பார்த்தே ஆக வேண்டும் என்றேன். அவரின் வீட்டுக்கு சென்று கமலை பார்த்து விட்டு தான் வீட்டுக்கு போனேன் கமல் ஒரு “மகா நடிகன்” என ரஜினி பேசினார்.