70, 80 காலகட்டங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் எம்ஜிஆர். சினிமாவின் மீது அளவற்ற பற்று இவருக்கு உண்டு என்பதை பலமுறை வெளிக்காட்டியுள்ளார் ஆம் முதலமைச்சராக இருந்து இருந்தாலும் பல்வேறு சிறந்த படங்களில் அப்போதும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் நல்ல கதை கிடைத்தால் போதும் அந்தஸ்தை பார்க்காமல் நடிக்கக் கூடியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அப்படி இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் நாளை நமதே இந்த படம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கொடுத்தது மேலும் இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நமதே படத்தில் எம்ஜிஆருடன் கைகோர்த்து வெண்ணிற ஆடை நிர்மலா, எம் என் நம்பியார், நாகேஷ் சந்திரமோகன், லதா உள்பட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தனர்.
இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது நாளை நமதே படத்தில் என்னதான் கதை களம் சிறப்பாக இருந்தாலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாளை நமதே பாடல் வேற லெவலில் ஹிட்டடித்தது மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மட்டுமே ஐந்து இடங்களில் நாளை நமதே பாடல் உணர்ச்சி போங்க வந்து போகும் இந்த பாடலைப் பார்க்கவே ரசிகர்களும் மக்களும் திரையரங்கை நாடிய காலம் உண்டு.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது அதாவது நாளை நமதே திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கும் வாய்ப்பு எம்ஜிஆருக்கு கிடைக்கவில்லையாம். படக்குழு முதலில் கமலஹாசனை தானாம். வளர்ந்துவரும் ஹீரோவான கமலஹாசன் அப்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் மேலும் ஒரு படத்துக்காக வெளிநாட்டிலிருந்து இருந்ததால்..
இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம் பின் படக்குழு ஒருவழியாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களிடம் கதையை சொல்ல அவருக்கு பிடித்து போனதால் படம் எடுக்கப்பட்டு. படம் திரையரங்கில் வெளிவந்த எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதை உணர்ந்த கமலஹாசன் இப்படி ஒரு சூப்பரான படத்தை தவற விட்டுவிட்டோமே என பல மேடைகளில் கூறி புலம்பியுள்ளார்.