பாகுபலி படத்திற்கு பயந்து தேதியை மாத்திய கமல்…! நடுவில் மாட்டி சிக்கி சின்னாபின்னமான விவேக்..

kamal-
kamal-

திரை உலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் ரசிகர்களை மக்களையும் சிரிக்க வைக்க மட்டுமே செய்கின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் காமெடி விவேக். இவர் தனது காமெடியில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை கொடுத்து சிந்திக்கவும் வைக்கின்றார்.  அதுதான் அவரது ஸ்டைலும் கூட..

அது மக்களையும் ரசிகர்களையும்  ரொம்பவும் பிடித்து போனதால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். காமெடியில் சமூக அக்கறை உள்ள கொடுக்க முடியும் என்பதை முதன் முதலில் எடுத்துக்காட்டியவர் விவேக் அதற்கு அவருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டது சினிமா உலகில் காமெடியனாக நடித்து ஓடிக்கொண்டிருந்த விவேக் கடைசி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.

அப்படி இவர் பாலகாட்டு மாதவன் திரைப்படம் ஜூலை மாதம் மூன்றாம் தேதி வெளியானது அதே சமயத்தில் பாகுபலி படமும் அதே ஆண்டு ஜூலை 10ஆம் தேதி  வெளியானது பாகுபலி படத்திற்கு முந்தைய வாரமே பாலக்காட்டு மாதவன் திரைப்படம் வெளிவர நேர்ந்ததால் அந்த திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது விவேக், படகுழுவினரும் நல்ல லாபம் பார்த்துவிடலாம் என கருதினர்.

இந்த சமயத்தில் தான் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது கமலின் பாபநாசம் திரைப்படம் அதே ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் பாகுபலி படம் வெளியாகிறது என்பதை பாபநாசம் படக்குழு அறிந்ததை முன்னிட்டு ஜூலை 3 தேதி வெளியிட முடிவெடுத்தனர் இதனால் பாலக்காட்டு மாதவன் திரைப்படத்திற்கு கிடைத்த தியேட்டர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனை அடுத்து நடிகர் விவேக் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினார் ஆனால் எதுவுமே அங்கு எடுபடவில்லை இதனால் ஒரே நாளில் பாலா காட்டு மாதவன் மற்றும் பாபநாசம் ஆகிய திரைப்படங்கள் மோதியதால் பாலக்காட்டு மாதவன் திரைப்படம் லாபத்தை பார்க்க முடியாமல் நஷ்டத்திலேயே முடிந்ததாம். இதனைப் பேட்டியில் விவேக் மனம் நொந்து போய் கூறி உள்ளார்.