உனக்கு குரல் சரியில்லை என கமலை துரத்தியை இயக்குனர்.! அன்று தனது பொன்னான வாய்ப்பை இழந்த உலக நாயகன்.? ஆனால் இன்று.?

kamal missed movie

கமல் இன்று உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் இவர் 1970 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கினார் முதன் முதலில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் தன்னுடைய இரண்டு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த கமல் இதுவரை 60 ஆண்டுகளாக சினிமா துறையில் கொடி கட்டி பறந்து வருகிறார். மேலும் இந்திய அளவில் நடிகர் கமல் ஐந்து மொழிகளில் நடித்து ஐந்து மொழிகளிலும் ஃபிலிம் ஃபேர் விருது வாங்கிய ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். பாலச்சந்திரனால் நடிகராக   அறிமுகப்படுத்தப்பட்ட கமல்  இன்று இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். மேலும் கமலின் பல  திரைப்படங்கள் ஆஸ்கார் விருதிற்கு சென்றுள்ளது. அந்த அளவு கமல் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்றது.

இதனால் தற்பொழுது கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாஸில், காளிதாஸ், ஜெயராம் ,ஷிவானி நாராயணன், மைனா நந்தினி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு கமலை மாஸாக திரையில் காண ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பாக கிடைத்தது.

இன்று மக்கள் கமலை உலக நாயகனாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் கமலுக்கு குரல் சரியில்லை எனக் கூறி  படங்களில் நடிக்க முடியாமல் போனது. , 1960 களிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கமல் இவர் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் பின் வளர்ந்த இளைஞனாக இருந்த பொழுது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

ஆனாலும் கமலுக்கு பெரிதாக நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தது ஆனால் நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது அப்பொழுது நடன இயக்குனராக தங்கப்பன் மாஸ்டர் உச்சத்தில் இருந்தார் அவரிடம் நடன உதவியாளராக கமலஹாசன் பணியாற்றி வந்தார். நடனத்தை கமல் விலக்கி நட்சத்திரங்களுக்கு கூறுவார். அதனால் திரை உலகில் பலருக்கு அவரை நன்றாக தெரிந்தது..

அந்த சமயத்தில் கே எஸ் பாலகிருஷ்ணன் குறத்தி மகன் என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் இந்த திரைப்படத்தில் சந்திரபாபு பத்மினி சிவகுமார் வெண்ணிற ஆடர்  நிர்மலா என பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டினார்கள் ஆனால் யாருக்கும் இந்த திரைப்படத்தை பெருமளவு பிடிக்கவில்லை குறவர்களை மையப்படுத்தி படம் எடுத்தால் பெரிய அளவு ஓடாது என வருத்தப்பட்டனர்.

பின்பு குறத்தி மகனை வைத்து கதை தொடரலாம் என்ற நினைத்தார்கள் அதற்கு பத்மினி திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு ஜெமினி கணேசன் கே ஆர் விஜயாவை வைத்து படம் எடுக்க ஆரம்பித்தார்கள் குறத்தி மகன் வேடத்தில் முதலில் யாரை நடிக்க வைக்கலாம் என பலரும் குழப்பத்தில் இருந்தார்கள் அப்பொழுதுதான் கமலை பற்றி இயக்குனருக்கு தெரிய வந்தது.

அந்த கதாபாத்திரம் மிகவும் படபட என பேச வேண்டும் அதனால் கமலை பேச சொன்னார்கள் கமல் பேசினார் ஆனால் கமலின் குரல் பிடிக்கவில்லை என்பதால் அவரை நிராகரித்து ஒதுக்கினார்கள். அதன் பிறகு தான் ஸ்ரீதர் தேர்வானார். ஆனாலும் அந்த திரைப்படத்திலேயே கமல் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள் பின்பு கமல் பெரிய அளவு பேசப்படாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அதன் பிறகு தான் பாலச்சந்திரனின் அரங்கேற்றம் திரைப்படத்தில் கமல் நடித்திருந்தார்.

பின்பு தன்னுடைய விடா முயற்சியால் விஸ்வரூபம் எடுத்து இன்று உலக நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

kamal
kamal