தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இரு தூண்கள் ஆகப் பார்க்க பட்டவர்கள் ரஜினி மற்றும் கமல். இருவரும் இவர்களது திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்டு அதிக ரசிகர்கள் பட்டணத்தை வைத்திருந்தவர்கள். தற்போது இவர்களை தொடர்ந்து பல இளம் நடிகர்கள் உச்ச நட்சத்திரமாக வந்துள்ளனர் அதிலும் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் இருவரும்..
தற்போது மக்கள் பலருக்கும் பிடித்த ஃபேவரட் நாயகனாக இருந்து வருகின்றனர். இருந்தாலும் ரஜினியும் கமலும் தற்போதும் பல சிறப்பான படங்களை கொடுத்து வருகின்றனர். ரஜினி கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகர் கமலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் விக்ரம் என்னும் மெகா ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது பல படங்களில் இணைந்துள்ளார். அதில் ஒன்றாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதியிலே கிடந்தது.
அதனை மீண்டும் தூசி தட்டி அந்த படத்தில் தற்போது கமல் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது மற்றும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பு ஒன்றாக தொடங்க உள்ளதால் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ஒன்றாக ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் மற்றும் ரஜினியின் படங்கள் திரையரங்கில் ஒன்றாக வெளியாவதால் அதனை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். இது போல் தான் ரஜினியின் சந்திரமுகி படமும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒன்றாக வெளியாகி மக்களை கொண்டாட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.