விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட நிலையில் கமலஹாசன் அவர்கள் மிகவும் பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கமலஹாசன் அவர்கள் தான்.
இந்நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகள் என மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி ஆகியோர்கள் மக்கள் மத்தியில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் மிகவும் கடுமையாக விளையாடி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்நிகழ்ச்சி 57 நாட்களை கடந்துள்ளது எனவே இதுவரையிலும் வைல்ட் காடு என்ட்ரி யாரும் வரவில்லை எனவே யார் புதிதாக வரப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் அவர்கள் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஒன்றை சொல்லிவிட்டு கிளம்பினார் அதாவது வரும் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியேற இருப்பதாக அறிவித்தார்.
எனவே இது போட்டியாளர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்செய் ஏற்படுத்தியுள்ளது ரட்சிதா மற்றும் தனலட்சுமி ஆகியோர்கள் நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் உள்ளதால் அவர்கள் இந்த வாரம் எலிமினேட்டாக வாய்ப்பு இல்லை மீதமுள்ள 11 போட்டியாளர்களின் இரண்டு பேர் இந்த வாரம் எலிமினேட்டாக இருக்கிறார்கள்.
எனவே அந்த இரண்டு போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அசீம் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.