தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ரஜினி மற்றும் கமலஹாசன் இவர்களுடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்று வருகிறது. இவர்கள் சினிமாவிற்கு அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு புகழ்பெற்ற இவர்கள் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை கமலஹாசன் அவர்கள் இழந்து இருக்கிறார். அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்க தற்பொழுது படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முரட்டுக்காளை திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தின் எஸ் பி முத்துராமன் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
அதேபோல் நடிகர் ரஜினிகாந்துக்கும் முன்பே ஹீரோவாக நடித்திருந்தாராம் கமல் அந்த வகையில் முத்துராமனின் முதல் தேர்வாக கமலஹாசன் தான் இருந்தாராம் ஆனால் கமலுக்கு கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் ரஜினியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தாராம் இயக்குனர் எஸ் பி முத்துராமன் அதன்பிறகு ரஜினிகாந்த் இடம் இவர் கதையை கூற அவருக்கு பிடித்து விடுகிறது எனவே இந்த திரைப்படத்தின் நடிப்பதற்காக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்துக்கு முன்பே கமல் அவர்கள் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார் தற்பொழுது வரையிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.