“விக்ரம்” படத்தை விளம்பரப்படுத்த பிரபல யூடியூப் சேனலில் கலந்துகொள்ளும் கமல், லோகேஷ்.!

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்த்தது விக்ரம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது நடிப்பிற்கு பெயர் போன உலக நாயகன் கமலஹாசனுக்கு ஈடு இணையாக நடிப்பில் மிரட்ட கூடிய நடிகர்களை தட்டி தூக்கி உள்ளார்.

லோகேஷ் அந்த வகையில் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை உள்ளே இழுத்துவிட்டு உள்ளார். விக்ரம் படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்துமே வேற லெவலில் இருந்து வந்துள்ளது.

குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பத்தல பத்தல பாடல் அண்மையில் விக்ரம் படத்தின் டிரைலரும் மிரட்டும். வகையில் இருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது சொல்லப்போனால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படம் வெளிவருவதற்கு முன்பாக போஸ்ட் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக கமல் சற்று வித்தியாசமாக யோசித்து  யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஒரு கோடி சப்ஸ்கிரை வைத்திருக்கும் “வில்லேஜ் புட்” சேனல் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது.

village food
village food

இந்த சேனலுக்கு தான் தற்போது உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து பங்கேற்று உள்ளனர் அதன் வீடியோ வெகு விரைவிலேயே வரப்போகிறது. விக்ரம் படத்தின் புரமோஷன் வேலைகளில் இது ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது நிச்சயம் கைகூடும் எனவும் தெரிய வருகிறது.