kamal latest movie update: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராகவும் உலகநாயகன் என்றும் போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சினிமாவில் பிரபலமாக நடித்து வரும் நடிகர் கமல் பல்வேறு மெக ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய திரைப்படத்தின் கதை மட்டும் அல்லாமல் கதாபாத்திரமும் மிக வித்தியாசமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சமீபத்தில் இளம் நடிகர்களுக்கு இணையாக இவரால் ஈடுகொடுக்க முடியவில்லை
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஓரளவு வெற்றி மட்டும்தான் பெற்று வருகிறது இந்நிலையில் எப்படியாவது ஒரு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என பழைய மெகா ஹிட் திரைப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டு விட்டது.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கமலஹாசன். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு தகுந்த கதாநாயகி இல்லாததால் கதாநாயகி விஷயமானது இழுபறியாக இருந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களையும் ஓரம்கட்டிவிட்டு தற்போது புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க நடிகர் கமலஹாசன் முன் வந்துள்ளாராம். அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது சில வருடங்களுக்கு முன்பு திரை உலகில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த பாபநாசம் திரைப்படம் தான்.
தற்சமயம் உலகநாயகன் கமலஹாசன் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரே மாதத்தில் முடித்து விட்டு அதனை வெளியிட வேண்டும் எனவும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறாராம்.