விஜய் கோட்டையில் பறக்கும் கமல் கொடி – சாதனைகளை அசால்டாக தகர்த்து எறியும் “விக்ரம்” திரைப்படம்.!

kamal-and-vijay
kamal-and-vijay

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம்வரும் கமலஹாசன் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்திய..

நிலையில் படம் வெளிவந்து பாசிட்டிவான கமெண்டுகளையே பெற்றுவருகின்றன மேலும் படம் எதிர்பாராத அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து மற்ற டாப் நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்றவர்கள் நடித்திருந்த நிலையில் தற்போது படத்தை குறித்து விமர்சிக்கும் ரசிகர்கள் பலரும் கமல் நடிப்பை எவ்வளவு பாராட்டி வருகிறார்களோ..

அதேபோல விஜய் சேதுபதி சூர்யா போன்றவர்களின் நடிப்பும் மிரட்டும் வகையில் இருந்தது படம் சூப்பர் டூப்பர் ஹிட் என புகழ்ந்து பேசி வருகிறது. இந்த நிலையில் விக்ரம் படம் முதல் நாளிலேயே உலகளவில் 48 கோடி வசூலை பெற்ற நிலையில் அடுத்த நாளில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதுவரை இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு நாட்களில் 43 கோடி வசூலை அள்ளி உள்ளது. மேலும் இதற்கு முன் விஜயின் பீஸ்ட் படம்தான் அதிக வசூலில் முதலிடத்தில் உள்ளது ஆனால் அமெரிக்காவில் வெளியான விக்ரம் படம் பீஸ்ட் படத்தின் மொத்த வசுளையும் இரண்டே நாளில் முறியடித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் விக்ரம் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதன்படி கேரளாவிலும் பீஸ்ட் படத்தின் வசூலை விக்ரம்படம் முறியடித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் கூடிய விரைவிலேயே மாஸ்டர் படத்தின் வசூலையும் விக்ரம் படம் கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது