உலக நாயகன் கமலஹாசன் சினிமா உலகில் பல கெட்டப்புகளை போட்டு நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். படத்தின் கதைக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி நடிக்க கூடிய நடிகர்களில் முதன்மையானவராகவும் இவர் இருந்து வருகிறார்.
சினிமா உலகில் நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தது கமல் பெயர் பேசப்படுகிறது அதேபோல ரொமான்டிக் விஷயங்களிலும் கமலை அடிச்சுக்க ஆளே இல்லை தன்னுடன் நடிக்கும் நடிகைகளை ஒரு வழி ஆக்கி விடுவார். பல சர்ச்சையான விஷயங்கள் நாம் பார்த்து உள்ளோம் அது போலவே தான் தற்பொழுதும் மறக்க முடியாத ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் கமல்.
கமலஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைபடம் புன்னகை மன்னன் இந்த படத்தில் ரேவதி, ரேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, சுதர்ஷன், விஜயா, சந்திரிகா, ஜெயலட்சுமி என பல பிரபலங்கள் நடித்து அசதி இருந்தனர். படத்தில் ரேகா மற்றும் கமல் ஒரு அருவியில் இருந்து குதிப்பது போல இருக்கும் காட்சி ரசிகர்களுக்கு எப்பொழுதும் ஃபேவரட்டான ஒரு காட்சி.
அந்த காட்சியில் கமலஹாசன் ரேகாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் அந்தக் காட்சியில் கமல் தனக்கு முத்தம் கொடுக்கப் போகிறார் என்பது ரேகாவுக்கு சுத்தமாக தெரியாதாம் இயக்குனரும் சொல்லவில்லையாம் கமல் உடனே அந்த சீன் வரும் பொழுது ரேகாவுக்கு முத்தம் கொடுக்க அவர் பதறி அடித்து போய்விட்டாராம்.
மேலும் இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட வெளிப்படையாக அவர் கூறினார். இந்த விஷயத்தை கமல் எனக்கு சொல்ல தேவையில்லை இயக்குனராவது சொல்லி இருக்க வேண்டும் அவரும் தன்னிடம் கூறவில்லை என சொல்லி அதிர வைத்தார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.