தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக ஜொலித்து வரும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தற்பொழுது படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்து வரும் நிலையில் இதனை அடுத்து கமலுடன் இணைந்து மூன்று பிரபல நடிகர்கள் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படம் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தற்பொழுது நடிகர் கமல் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து நடித்து வரும் கமல் மறுபுறம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார்.
அப்படி இதுவரையிலும் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து வரும் கமல் தற்பொழுது மூன்று முன்னணி நடிகர்களின் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எஸ்கே 21’ படத்தை ராஜ்கமல் ப்ளீஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இவ்வாறு இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படத்தினை ராஜ்கமால் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் தொடங்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் படம் உருவாகி வரும் நிலையில் இதனை அடுத்த தனுஷ் நெல்சன் திலீப் குமார் இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆனால் இதுவரையிலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரையிலும் வெளியாகவில்லை.
விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு இதன் மூலம் மூன்று முன்னணி நடிகர்களின் படத்தினை ஒரே நேரத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக 500 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது.