குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலத்திலிருந்து இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரம் பல கெட்டப்புகளில் நடித்து மக்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். சினிமாவே வாழ்க்கை என கடந்த உலக நாயகன் கமலஹாசன் சினிமாவை மென்மேலும் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது பாதையை மாற்றி அமைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டார்.
அரசியல்வாதியாக மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமான உலகநாயகன் கமலஹாசன் திடீரென மீண்டும் தனது பழைய யுக்தியை கையாள தொடங்கிய உள்ளார் சினிமாவில் நடிப்பது படங்களை தயாரிப்பது மற்றும் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருவதால் உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்கள் தற்போது செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்
கமல் தனது பயணத்தை நிறுத்தி கொள்ளாமல் கதராடை நிறுவனத்தை அமெரிக்காவில் தற்போது தொடங்க முயற்சி செய்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் கமலஹாசன் “விக்ரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் பணியாற்றி வந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் லைக்கா நிறுவனமும் இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நடத்தியது அது தற்பொழுது வெற்றியையும் கொடுத்துள்ளது மீண்டும் இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனராம் மேலும் இந்த படத்தில் பல்வேறு நடிகைகள் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அவர்களையும் இழுத்து வருகிறது ஆனால் கமலுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
இதனையடுத்து படக்குழு திரிஷா அல்லது தமன்னாவை கமலுக்கு ஜோடி போட முயற்சியை செய்தது திரிஷா இதில் நடிக்க முடியாது என சொல்லி அதை அடுத்து தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தமன்னா முதலில் ஒப்புக் கொண்டுள்ளார் ஆனால் திடீரென என நினைத்தார் என்று தெரியவில்லை சில காரணங்களை சொல்லி இந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆக பார்க்கிறாராம் ஆனால் படக்குழு எப்படியும் தமன்னா நடிகை வைத்து விடலாம் என ஒரு ஒரு சிலர் கூறி வருகின்றனர்.