பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் ஷங்கர் சினிமா உலகில் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்ச அளவில் பல இயக்கி வெற்றி கண்டு உள்ளார். இதுவரை ரஜினி, கமல், விஜய், விக்ரம், அர்ஜுன் போன்ற ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி பெற்று உள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட..
நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சில பிரச்சனைகள் காரணமாக பிறமொழி பக்கம் தாவினார் முதலாவதாக தெலுங்கு பக்கம் தாவி ராம்சரண் வைத்து RC 15 என்னும் படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் உருவாகி வருகிறது இறுதி கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கமலை வைத்து ஏற்கனவே இந்தியன் 2 படத்தை எடுத்தார் ஆனால் சில பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்டது அதை மீண்டும் எடுப்பார் என தெரிய வருகிறது.
உலக நாயகன் கமலஹாசனும் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
கிடப்பில் கிடக்கும் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டால் அவருக்கே ஒரு திருப்தியை கொடுக்கும் என சொல்லப்படுகிறது அதற்காக தற்போது கமலும் அமெரிக்கா சென்று உள்ளார் வந்து இந்தியன் 2 திரைப்படத்தின் நடிப்பார் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் எப்படியாவது ஷங்கர் தெலுங்கு படத்தை எடுத்து விட வேண்டும் என ஆர்வம் காட்டி வருகிறாராம்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதாவது ஆகஸ்ட் மாதம் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது தற்பொழுது நிலவுகின்ற சூழ்நிலையை பார்த்தால் செப்டம்பர் மாதம் சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.