தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன்னாக விளங்குபவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களாக படமே பண்ணாததால் கமலஹாசனின் சினிமா கேரியர் முடிந்து விட்டது என பலரும் கூச்சலிட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு சொன்ன விக்ரம் படத்தின்..
கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தை தயாரித்து நடித்தார் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து கிடப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
அதன் பிறகு மணிரத்தினத்துடன் ஒரு படம், ஹச். வினோத் உடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் என அடுத்தடுத்த இயக்குனர்களுடன் கைகோர்க்க உள்ளார் மேலும் அடுத்த மூன்று வருடத்திற்கு இயக்குனர்களை தேர்வு செய்து வைத்துள்ளார். அடுத்தடுத்த வெற்றிகளை இவர் கொடுக்க இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் மறுபக்கம்..
தயாரிப்பிலும் முழு வீச்சில் இறங்கி உள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அதேபோல தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தையும் கமல் தயாரிக்க இருக்கிறார் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட அண்மையில் வெளிவந்தது சிம்பு நடிக்கும் அந்த படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி என சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் வெயிட்டாக இருந்ததோ அதைவிட பல மடங்கு பவர்புல்லான ஒரு கேமியோ ரோலில் தான் கமலஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து வெகு விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.