தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இவ்வாறு இந்த படத்தின் ரிலீஸ் தேதி கூட இதுவரையிலும் வெளியிடாமல் இருக்கும் நிலையில் இதற்கு முன்பே தனுஷின் 50வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான வேலைகளை தனுஷ் தொடங்கி இருக்கிறார்.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் ஷூட்டிங் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குனர் நெல்சனின் தனுஷின் புதிய படம் உருவாக இருக்கும் நிலையில் இதனை கமல் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாத்தி வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனை அடுத்து தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் 50வது படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இருக்கிறது.
அந்த வகையில் சென்னையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு பிரேக் எடுக்காமல் ஒரே கட்டமாக முடிக்க இருக்கிறார்கள். இதனை அடுத்து மறுபுறம் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய், தெலுங்கு சேகர் கம்முலா ஆசிரியர்களின் படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தனுஷின் புதிய படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார் தற்பொழுது இவர் ரஜினியின் ஜெய்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார் இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கும் நிலையில் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தனுஷிடம் கதை கூறி அதற்கான கால்ஷீட் வாங்கியிருக்கிறாராம்.
முதன்முறையாக தனுஷ் நெல்சன் கூட்டணியில் இந்த படம் உருவாக இருக்கிறது ஜெய்லர் படம் ரிலீஸ் ஆனவுடன் தனுஷ் நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் வேலையை தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
இவ்வாறு தனுஷ் நெல்சன் இணையும் இந்த படத்தினை ராஜ்கமல் பிலி்ம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே கமல் சிவகார்த்திகேயன் sk21, சிம்புவின் STR 48 போன்ற திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில் இதனை அடுத்து தனுஷின் படத்தையும் இயக்க முடிவு செய்துள்ளார் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.