India beat the Badshah collection : ஒரு காலகட்டத்தில் கமல் உச்ச நாயகனாக இருக்கும் பொழுது இரண்டாம் கட்ட கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் ரஜினி. அதுமட்டுமில்லாமல் கமலின் திரைப்படத்திலேயே ரஜினி வில்லனாக நடித்துள்ளார். அப்படி இருந்த வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறியது ரஜினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.
பிறகு கமலுக்கு போட்டியாக ரஜினி உருவாகினார் என்னதான் கமலுக்கு போட்டியாக ரஜினி இருந்தாலும் கமல் நடிப்பில் ஒரு திறமைசாலி என பலரும் கூறி நாம் கேட்டுள்ளோம். அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் பாட்ஷா.
ஆசை ஆசையாய் கேட்ட மனைவி சங்கீதா.. மறுக்க முடியாமல் “விஜய்” நடித்த திரைப்படம்.!
இந்த திரைப்படம் 1989 ஆம் ஆண்டு வெளியாகிய அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் வசூலை முறியடித்தது. கமலின் சாம்ராஜ்யத்தை கலைத்த ரஜினி. 1995இல் பாஷா திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தின் வசூல் மிகப் பெரிய வசூலாக கூறப்பட்டது 10 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் கமலுக்கு 1996 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி இந்தியன் திரைப்படம் வெளியானது. இதில் தவறு செய்தவர்களை வயதான நபர் எப்படி கொலை செய்கிறார் என்று ஒரு வரியில் இந்த திரைப்படத்தின் கதையை கூறலாம் தவறு செய்தவர்களை எதற்க்காக தண்டிக்கிறார், அவர் யார் சுதந்திர போராட்ட தியாகியா, ஏன் அவர் இத்தனை கொலைகளை செய்கிறார் என்பது படத்தின் மையக்கரு.
அதேபோல் இந்தியன் திரைப்படம் தமிழில் வெளியான அதே நாளில் தெலுங்கில் “பாரதீயடு” என்ற பெயரில் வெளியாகி ஆந்திராவில் மாபெரும் வெற்றியை பெற்றதுஅதேபோல் ஹிந்தியில் “இந்துஸ்தானி” என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.
இந்தியன் 2 திரைப்படம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் உருவானது ஆனால் அனைத்து செலவுகளும் போக ரத்தினம் 50 கோடி ரூபாய் லாபமாக பெற்றார் என அப்பொழுதே கூறப்பட்டது. படத்தை ஏ எம் ரத்தினம் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் தயாரித்திருந்தது.
1995 ஆம் ஆண்டு வெளியாகிய ரஜினியின் பாட்ஷா திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து திரைப்படங்களின் வசூலை முறியடித்தது ஆனால் அடுத்த வருடமே இந்தியன் திரைப்படம் வெளியாகி பாட்ஷாவின் வசூலை சுக்கு நூறாக உடைத்தது அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் இந்தியன் திரைப்படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் பல திரைப்படங்கள் திணறியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.