சினிமா உலகில் ஒரு சிலர் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்துவார்கள் அவரை ரசிகர்களும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை விட அவருக்கு புனை பெயரை வைத்து அழகு பார்ப்பார்கள் அந்த வகையில் நடிப்புக்கு பெயர் போன கமலை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக உலகநாயகன் என அழைப்பது வழக்கம்.
தொடர்ந்து நடிப்பில் வித்தியாசத்தை கொடுத்து அசத்தி வருகிறார் 4 வருடங்களுக்கு பிறகு விக்ரம் திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுத்துள்ளார். விக்ரம் திரைப்படம் முழுக்க முழுக்க போதைபொருள் மற்றும் அதை கடத்தும் ரவுடிகளை அழிப்பது போன்று தான் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.
இதில் கமலுடன் சேர்ந்து பகத் பாசில் மிக அருமையாக நடித்திருப்பார் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சூர்யா போன்றவர்கள் மிரட்டி உள்ளனர் படம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது 4 நாட்கள் முடிவில் 150 கோடிக்கு மேல் உலக அளவில் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே நல்லதொரு வசூல் வேட்டை நடத்தியுள்ளது .
மற்ற இடங்களிலும் விக்ரம் திரைப்படம் எதிர்பார்க்காத வசூல்தான் குறிப்பாக கேரளாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது இது வரை மட்டுமே கேரளாவில் சுமார் 20 கோடிக்கு மேல் வசூலை அள்ளி உள்ளதாம். விஜய்யின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் தற்போது கமலின் கைதான் அதிகமாகியிருக்கிறது.
வருகின்ற நாட்களிலும் அங்கு நல்லதொரு வசூல் சாதனையை செய்து யாரும் நிகழ்த்த முடியாத ஒரு சாதனையை செய்து அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளிவந்த படங்களில் எந்த ஒரு படமும் 20 கோடி வசூலை கேரளாவில் அள்ளியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.