கவுண்டமணியை அறவே வெறுத்த கமல்.? பின்னணியில் இருக்கும் காரணம் இதுதானா..

kamal-and-kavundamani

தமிழ் திரை உலகில் தற்பொழுது காமெடி நடிகர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே போகிறது ஆனால் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இருக்கின்றனர் ஆனால் அந்த காலத்தில் நடித்த கவுண்டமணி,செந்தில் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்ததாக திகழ்ந்து விடும் அதிலும் குறிப்பாக கவுண்டமணி 90 காலங்களில் நடிக்காத திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவர் காமெடி நடிகனாக நடித்தாலும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனை விட அதிகமாகவும் சம்பளம் பெற்றுள்ளாராம் மேலும் கவுண்டமணி பொதுவாகவே படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக அனைவரிடமும் பேசுவாராம் இவர் மற்ற நடிகர்களை ஜாலியாக கிண்டல் செய்வதை பார்த்து கதாநாயகனாக இருந்தாலும் உடனே சிரித்து விடுவார்களாம்.

இப்படி ஜாலியாக இருக்கும் கவுண்டமணியை நடிகர் கமல்ஹாசனுக்கு சுத்தமாக பிடிக்காது என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்து உள்ளது கவுண்டமணி படப்பிடிப்பு தளத்தில் கவுண்டர் அடிப்பது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கவுண்டர் அடிப்பது போன்றவற்றை செய்து வருவாராம். இதனால் கமல்ஹாசனுக்கு இவரை சுத்தமாக பிடிக்காதாம்.

மேலும் நடிகர் கவுண்டமணிக்கு சக நடிகர்களை ஒருமையில் பேசும் பழக்கமும் இருந்ததாம் இதனாலேயே கமலுக்கு சுத்தமாக இவரை பிடிக்காமல் போய்விட்டதாம்.இந்த காரணத்திற்காக நடிகர் கமல்ஹாசன் கவுண்டமணியிடம் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதில்லையாம் நடிகர் கமல்ஹாசன். மேலும் இவர்கள் கூட்டணியில் இறுதியாக இந்தியன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருமே சேரவே இல்லை என்று கூட கூறலாம்.

kamal
kamal

மேலும் இதனை அறிந்த கவுண்டமணி நடிகர் கமல்ஹாசன் பேசவில்லை என்றாலும் தனது அடுத்த அடுத்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டே இருந்தாராம் அப்பொழுது காலகட்டத்திலேயே நடிகர் கவுண்டமணி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பாதித்து வந்த இவருக்கு கமல் தன்னிடம் பேசவில்லை என்பது பற்றி கவலைப்படாமல் இவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் இதனை  கண்டுகொள்ளவில்லை என்று இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.