தல அஜித்தின் திரைப்பயணத்தில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்றுதான் அமர்க்களம் இந்த திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து விட்டது பின்பு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இந்த திரைப்படம் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது என்ற விஷயம் தெரிந்த ஒன்றுதான்.
இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷாலினி,ராதிகா,தாமு,நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஷாலினி கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க வைக்க அணுகினார்களாம் அப்பொழுது ஜோதிகா பல படங்களில் பிசியாக நடித்து வந்ததும் இந்த வாய்ப்பு ஷாலினிக்கு சென்றுவிட்டது.
இப்படி ஒரு நிலையில் ஷாலினியிடம் கதையை கூறியபோது ஷாலினி எனக்கு படிப்பு இருப்பதாக கூறி இந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லையாம் இருந்தாலும் மூன்று மாதம் அவரை விடாமல் தொல்லை செய்து பின்பு அவர் இந்த திரைப்படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.இந்த திரைப்படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இதில் கமல் நடித்த படங்களின் போஸ்டர்கள் வந்து வந்து போகும் அதை சரியாக நாம் பார்த்திருக்க மாட்டோம்.
கதைப்படி வாசு தியேட்டரில் தான் தங்கியிருப்பார் அப்பொழுது கூட தல அஜித் தேவர் மகன் போஸ்டரில் படுத்திருக்கும் பொழுது ரகுவரன் என்ட்ரி கொடுக்கும் பொழுது பின்னணியில் நாயகன் போஸ்டர் ஒட்டி இருக்கும்.அதேபோல் அஜித்தை ஷாலினி சந்திக்க வரும் பொழுது பின்னால் நிழல் நிஜமாகிறது. பட போஸ்டர் ஒட்டி இருக்கும்.
மேலும் ரகுவரன் ஃபிளாஷ்பேக் சொல்லும்போது கூட கைதியின் டைரி படத்தின் போஸ்டர் ஒட்டி இருக்கும் இதேபோல் கமல் நடித்த பல படங்களின் போஸ்டர்கள் இந்த திரைப்படத்தில் வந்து வந்து போகிறது இந்த விஷயத்தை தற்பொழுது தல அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.