தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார், அதேபோல் கமலஹாசன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் தனி இடம் உண்டு. தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் கமல்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதை களம் கொண்டது அதேபோல் படங்களில் பல கெட்ட போட்டு அசத்தியவர், தற்பொழுது இருக்கும் நடிகர்கள் ஒரே படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடித்து உள்ளார்கள் ஆனால் கமலஹாசன் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் இன்றும் கமல் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அதனைக் காண மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது, இந்த நிலையில் பல்வேறு திறமைகளை கொண்ட கமலஹாசன் பல படங்களில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.
மிகவும் ரிஸ்க்கான காட்சி என்றாலும் இவர் டுப் போடுவதில்லை, இந்த நிலையில் கமலஹாசன் டூப் போடாமல் நடித்த ரிஸ்க்கான காட்சிகள் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த பல ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளார்கள்.
A Compilation of @ikamalhaasan Risky Stunts..The ForeRunner of Indian Cinema for never using any dupes..!?❤️????? pic.twitter.com/1L6J8aFPOY
— Prashu Prashanth (@Prashu94Haasan) April 18, 2020