தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரும் 40 வருடங்களுக்கு மேல்லாக திரை உலகில் நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் இருவருக்குமே வெவ்வேறு பாதையில் ஓடியதால் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர் இருவரும் சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி, நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் இப்படி இருந்தாலும்..
திறமை என்று பார்த்தால் ரஜினியை விட கமலுக்கு கொஞ்சம் அதிகம் ஏனென்றால் தமிழ் சினிமா உலகில் அதிகப்படியான கெட்டப்புகளை போட்டு நடித்தவர் பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர் தமிழ் சினிமாவை புதுமையாக்கியவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுக்குன்னு ரஜினியையும் நாம் குறை சொல்ல முடியாது.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் தற்பொழுது நம்பர் ஒன் ஹீரோவாக ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் இருவருமே தொடர்ந்து படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் கமல் தற்பொழுதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் அவரது கையில் இந்தியன் 2 மற்றும் தலைசிறந்த மூன்று இயக்குனர்களுடனும் படம் பண்ண இருக்கிறார்.
மறுபக்கம் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல கவிதாலயா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன் செய்த சாதனைகள் பல அன்பே சிவம், மைக்கேல் மதன காமராஜ், விருமாண்டி என பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை அடுத்த பத்து வருடத்திற்கு பிறகு அனைவரும் ரஜினியை மறந்து விடுவார்கள் ஆனால் கமலஹாசன் அப்படி கிடையாது என்று கூறியுள்ளார். இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவல் கமல் ரசிகர்களை கொண்டாட வைத்தாலும், ரஜினி ரசிகர்களையும் மத்தியில் தற்பொழுது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.