தமிழில் அண்மைக்காலமாக வெளிவந்த டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை உதாரணத்திற்கு விஜயின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களின் கதைகள் மக்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.
இந்தநிலையில் லோகேஷ் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் விக்ரம் என்னும் பிரம்மாண்ட படம் பான் இந்திய அளவில் உருவாக்கியது இந்த படம் கமலஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாக்கியதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
படமும் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது. படத்தின் கதை சுவாரஸ்யமாக சென்றதால் மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படம் நல்ல வசூலை அள்ளி வருவதால் இந்த படத்தை தயாரித்த கமலஹாசன் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.
அதனால் படத்தில் இணைந்த இயக்குனர்கள் நடிகர்கள் என பலருக்கும் பரிசுகளையும் வழங்கினார். அண்மையில் விக்ரம் படத்தின் வெற்றிவிழா கூட நடைபெற்றது அதில் லோகேஷ் கனகராஜ், கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின், அனிருத், விஜய் சேதுபதி போன்ற பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் படம் வெளிவந்து மூன்று வாரங்களாகின்ற நிலையில் 365 கோடிக்கு மேல் வசூலை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளதாம். அதன்படி வருகின்ற ஜூலை 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் விக்ரம் படம் ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடி தளத்திலும் விக்ரம் படம் நல்ல ரீச் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது