கமலஹாசனின் “விக்ரம் திரைப்படம்” இத்தனை திரையரங்குகளில் வெளிவருகிறதா.? பீஸ்ட்டை ஓரம்கட்டிய சம்பவம்.! வெளிவந்த தகவல்.

kamal
kamal

முன்னணி நடிகராக வலம் வரும் உலக நாயகன் கமல் நடிப்பில் இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி, விஜய் போன்றவர்களை வைத்து கைதி மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்.

இருந்தாலும் சினிமாவின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை முன்னணி நட்சத்திரமாக இருந்துவரும் கமலுடன் இணைந்து பணியாற்றுவது முதல்முறை என்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. நடிகர் கமலும் சின்னத்திரை, அரசியல், தொழில்நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் பிஸியாக இருந்து வந்ததால் சமீப காலமாக படங்களில் அதிகம் கமிட் ஆகாமல் இருந்தார்.

இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய கதை சொல்ல பிடித்துப் போககமல் உடன் இணைந்து அவர் நடித்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் அதிக பொருட்செலவில் பல நவீன முறைகளைக் கையாண்டு இந்த படத்தை எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லன்களாக விஜய் சேதுபதி மற்றும் மலையாள பிரபல நடிகரான பகத் பாசில் நடித்து வருகின்றனர்.

இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு தமிழை தாண்டி பல இடங்களிலும் பெரிய அளவில் உள்ளது. விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளிவருகிறது என்பதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வருகின்ற மே 15ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்ரம் திரைப்படம் தமிழைத் தாண்டி கேரளாவில் 400க்கு அதிகமான திரையரங்கில் வெளியாகும் என தெரிய வருகிறது. மேலும் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு பிறகு விக்ரம் படம் வெளிவருவதால் அதிக இடங்களில் படம் வெளியாகி உலக அளவில் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.