தென்னிந்திய சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்டு கடந்தாய் 65 வருடங்களாக சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் உலக நாயகன் கமலஹாசன். அவர்களுடைய 68வது பிறந்த நாளை முன்னிட்டு உலகமே அவரை கொண்டாடி வருகிறது இவர் தன்னுடைய நான்கு வயதில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் தான் களத்தூர் கண்ணம்மா.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து சகலகலா வல்லவனாக சினிமாவில் வலம் வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய 68 ஆவது பிறந்தநாள் கொண்டாடி வரும் இவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளி வந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட 65 வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் இவர் தன்னுடைய வாழ்நாளில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்பது பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் டாலர் சொத்து இருக்கிறதாம் அது இந்தியா மதிப்பில் 400 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிகாரப்பூர்வமான சொத்து விவரத்தை தாக்குதல் செய்யும் பொழுது வெறும் 177 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் இதனைத் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போலவே கமலுக்கும் கார் மீது தனி ஒரு விருப்பம் இருந்து வருகிறது. எனவே இவரிடம் பிஎம்டபிள்யூ 730 எல்டி மற்றும் லெக்சஸ் எல்எக்ஸ் 507 சொகுசு கார்கள் இருக்கிறது. எனவே இதனை வைத்து பார்க்கும் பொழுது இதனுடைய மதிப்பு மட்டும் 3.79 கோடி. பிறகு கமலஹாசனுக்கு சென்னையில் வீடு மற்றும் அலுவலகங்கள் பல வருடங்களாக இருந்து வருகிறது அதனுடைய மதிப்பு 19 கோடி.
அதில் முக்கியமாக இவருக்கு சென்னையில் சொந்தமாக இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் நிலங்களின் மதிப்பு 92 கோடி இவ்வாறு இதே போல் கமல் லண்டனில் இரண்டரை கோடிக்கு வீடு உள்ளது மேலும் சினிமாவிலும் தயாரிப்பு, நடிப்பு, விளம்பரம், பிக்பாஸ் என தொடர்ந்த பல துறைகளில் சாதித்து வரும் கமல் அவர்கள் ஒட்டுமொத்தமாக ஆண்டிற்கு ஐந்து மில்லியன் டாலர் வரை சம்பாதித்து வருகிறார்.
அதன்படி பார்த்தால் இந்திய ரூபாயின் மதிப்பில் 40 கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் சம்பாதித்து வருகிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் 40 கோண்டியை கோடியையும் தாண்டி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருந்து வரும் நிலையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியினை தந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.