தமிழ் சினிமா உலகில் ஒரு வருடத்துக்கு 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்கிறது. இப்படி இருந்தாலும் ஒரு சில படங்கள் மக்களுக்கு பிடித்து போய் விட்டால் அதை காலம் கடந்த பிறகும் அந்தப்படத்தை பற்றிப் பேசுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் பல சிறப்பான படங்களை கொடுத்து தன்னையும் தன்னுடன் பயணித்த நடிகர்களையும் உச்சத்திற்கு அழைத்துச் சென்றவர் கே எஸ் ரவிக்குமார் குறிப்பாக ரஜினி, கமல், அஜீத் போன்ற நடிகர்களை வைத்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது.
குறிப்பாக ரஜினியுடன் இவர் பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக தான் இருந்து வருகின்றன அதிலும் குறிப்பாக படையப்பா திரைப்படம் ரஜினிகாந்த் கேரியரில் மிகமுக்கியமான திரைப்படமாக அமைந்தது இந்த படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன இதனை சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்து ரஜினி குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது ரஜினிக்கு பல படங்கள் ஹிட் அடித்து உள்ளன. ஆனால் அவரது கேரியரில் மிக முக்கிய படமாக இருந்தது படையப்பா தான் என கூறினார். இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் பொழுது ரஜினியையும் தாண்டி மற்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருப்பார்கள் ஒவ்வொரு சீனும் பார்த்து பார்த்து எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
படையப்பா படத்தில் ரஜினி சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் செந்தில் சிவாஜி கணேசன் மணிவண்ணன் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தியிருப்பார்கள். மேலும் ரஜினி குறித்து கேஎஸ் ரவிக்குமார் பேசியது. ரஜினியும் கமலும் சினிமாவையும் தாண்டி சிறந்த நண்பர்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் ஒரு தடவை கமலை வைத்து ஒரு படம் பண்ண போகி இருந்தேன் அதற்கு வழிவகுத்துக் கொடுத்தது ரசினிகாந்த் தான் ஆனால் கமலோ அப்பொழுது ஹேராம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அதனால் என்னுடைய படம் பாதியிலேயே நின்றது இதனால் ரஜினி நாம் சொல்லி தானே கேஎஸ் ரவிக்குமார் கமல் படத்தை எடுக்க போனார்.
ஆனால் கமலோ இந்த படத்தில் நடிக்காமல் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவசர அவசரமாக கமலிடம் பேசி இந்த படத்தையும் முடித்து தர வேண்டும். பின் கமலும் அதை புரிந்து கொண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான தெனாலி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்திற்கு தெனாலி என பெயர் வைக்க காரணமே ரஜினி என கூறினார்.