நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டு நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். தனது நடிப்பின் மூலமாகவே மிகப்பெரிய ஒரு உச்சத்தை தொட்டு உள்ளார் என கூறப்படுகிறது.
நடிகர் கமலஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை அவருக்கு ரொம்ப பிடித்துப் போக அந்த படத்தில் துணிந்து நடித்தும் தயாரிக்கவும் செய்தார். மேலும் இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர்.
படம் ஒரு வழியாக கடந்த ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது அதன் விளைவாக விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு படமும் இப்படி ஒரு சாதனையை செய்ததில்லை என கூறப்படுகிறது
இதனால் கமல் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். விக்ரம் திரைப்படம் திரையரங்கை தாண்டி ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல் சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தேவர்மகன் 2 போன்ற படங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள ஷேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் தமிழ்நாடு திரையரங்கு ஷேர் மட்டுமே இதுவரை ரெட் ஜெயன்ஸ் கமலுக்கு கொடுத்துள்ளது சுமார் 98 கோடி என சொல்லப்படுகிறது. இதனால் தற்போது கமல் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார்.