உலக நாயகன் கமலஹாசன் எப்பொழுதும் படத்தின் கதையை முழுமையாக கேட்டு அறிந்து அதில் தனது திறமையை எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்த பின்பு தான் அந்த படத்தில் நடிக்கவே ஒற்றுக் கொள்வார்.
அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே திசை திரும்பாமல் இருந்த கமலுக்கு லோகேஷ் கனகராஜ். வாண்டடாக போய் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தை துணிந்து தயாரித்து, நடிக்கவும் செய்தார். அவர் கணித்தது போலவே படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு பக்கம் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் மறுபக்கம் இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, காயத்திரி, சூர்யா. நரேன் ஏஜென்ட் டினா மற்றும் பலர் நடித்து அசத்தியது இந்த படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இதுவரை விக்ரம் திரைப்படம் வெளியாகி ஐந்து வாரத்தை தொட்டு உள்ளது.
இதுவரை மட்டுமே மிக பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளி உள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் சுமார் 410 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் விக்ரம் படத்தின் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 150 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் இன்னும் வசூலிக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தை தயாரித்ததற்காக உலக நாயகன் கமலஹாசன் எவ்வளவு லாபம் பார்த்துள்ளார் என்பதை குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் கமலுக்கு இந்த படத்தின் மூலம் சுமார் 127 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.