வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது.. கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் வசூல் நிலவரம்

Kamal Haasan
Kamal Haasan

Kamal Haasan : உலகநாயகன் கமலஹாசன் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவர் திரை உலகில் போடாத கெட்டப்பே கிடையாது நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார் இப்படிப்பட்ட உலகநாயகன் கமலஹாசனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன கைவசம் இந்தியன் 2, THUG LIFE, கமல் 233, கல்கி 2898 போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 5 படங்களின் வசூல் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

விக்ரம் : விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு நான்கு வருடங்கள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த கமலுக்கு லோகேஷ்  சொன்ன கதை பிடித்துப் போகவே அதிரடியாக விக்ரம் படம் உருவானது இந்தப் படத்தை கமல் தயாரித்து, நடித்த நடித்திருந்தார் படம் முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் ஆக்சன் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது.

இளமை இதோ.. இதோ.. பாடலில் கமல் பயன்படுத்திய புல்லட்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.வி.எம் நிறுவனம்

விஸ்வரூபம் 2 : விஸ்வரூபம் வெளிவந்து பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து இரண்டாவது பாகவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு படம் வெளியானது எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று இந்த படம் ஓடியது அதனால் வசூலும் குறைந்தது இந்த படம் அதிகபட்சமாக 50 லிருந்து 60 கோடி தான் வசூலித்திற்கும் என ஒரு பேச்சையே பரவாலாக இருந்து வருகிறது.

தூங்காவனம்  : ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமலுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், த்ரிஷா, கிஷோர் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். தன்னுடைய குழந்தையை காப்பாற்றுவதற்காக கமல் போராடும் ஒவ்வொரு சீனும் மிரட்டலாக இருக்கும்  படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

உங்க புள்ளைக்கே சப்போர்ட் பண்ணுங்க பாக்கியாவை கிழித்து தொங்கவிட்ட ஜெனி.. மாலினியால் உடையும் குடும்பம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

பாபநாசம் : ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபநாசம் இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது ஓட்டு மொத்தமாக 100 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

உத்தம வில்லன் : ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் உத்தம வில்லன் என்கின்ற கதாபாத்திரத்தை கொள்ள  ஏதோ செய்து பார்ப்பார்கள் ஆனால் அவருக்கு சாவு நெருங்கவே நெருங்காது.  காமெடி கலந்த படமாக இருந்ததால் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்த படம் 100 கோடி வசூல் செய்தது.