Kamal Haasan’s Indian film actress to join popular party : சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் ஊர்மிளா.
இவரைப் பற்றி ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக வெளிவந்துள்ளது. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தேர்தலில் தோல்வி அடைந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் மறுபடியும் ஒரு பிரபலமான கட்சியில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது.
நாளை இவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா என்ற கட்சியில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் சிவசேனா கட்சியில் இவர் நின்று தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தால் இவர் ராஜ்சபா உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு செல்லலாம் என்று சிவசேனா கட்சி உறுப்பினர்கள் கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.