தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கமலஹாசன் தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்துவிட்டார் ஆரம்பத்தில் ஒண்ணும் தெரியாத குழந்தை போல இருந்து வந்த கமலஹாசன் தற்போது போட்டியாளர்கள் இடம் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் கமலின் காட்சிகள் முடிவடைந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் தனக்கு கதை சொல்லும் இயக்குனர்களிடம் ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் இல்லாததன் காரணமாக கதை ஏதேனும் மாற்றம் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தான் படித்த ஏழை குழந்தையின் படிப்பு பற்றிய புத்தகம் ஒன்றை கமல்ஹாசனிடம் கொடுத்துள்ளார் இந்த கதையை வைத்து தான் உங்களை வைத்து திரைப்படமாக இயக்க போகிறேன் என்று வெற்றிமாறன் கோரியிருந்தார்.
இந்நிலையில் அந்த புத்தகத்தையே நடிகர் கமலஹாசன் மனப்பாடம் செய்துவிட்டு இந்த திரைப்படத்தில் நடிக்க தயார் என்று சம்மதம் தெரிவித்துள்ளாராம் இதனால் வெற்றிமாறன் தற்போது மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே நாவலைத் தழுவி தான் இருக்கும்.
அப்படி உருவாக்கிய விசாரணை அசுரன் ஆகிய திரைப் படங்கள் மாபெரும் வெற்றி கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் கமலஹாசனை வைத்து ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க போவதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள்.