மொக்க கதையாக இருந்தாலும் அதில் தனது திறமையை சிறப்பாக வெளிகாட்டி அந்த படத்தை வெற்றி படமாக மாற்றக்கூடியவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து ஒரு பக்கா ஆக்சன் படமாக உருவாகியிருந்தது.
படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து அசத்தினர். இந்த படம் வெளிவந்த நல்ல விமர்சனத்தை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படி திரையுலகில் வெற்றி நடிகராக ஓடிக்கொண்டிருக்கும் கமல் அவ்வபோது நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது வழக்கம்…
அந்த வகையில் சமீபகாலமாக ஆண்ட்ரியா உடன் இவர் பெரிய அளவில் கிசுகிசுக்கப்படுகிறார் ஆனால் இதற்கு இருவருமே எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டிற்கு கமல் அடிக்கடி சென்று வருவதாக கூறப்படுகிறது அதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா இவர் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, பூஜை, அரண்மனை, துப்பறிவாளன், மாஸ்டர், வடசென்னை என ஒவ்வொரு படத்திலும் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருந்து வந்துள்ளது மேலும் அந்த படங்களும் வெற்றியை ருசித்துள்ளன.
இதனால் ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள் வெற்றி படங்களாக இருப்பதால் கமல் தனது படமான விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடிக்க வைத்தார். அதுவும் வெற்றி பெற்றதால் கமலின் அடுத்தடுத்த படங்களில் ஆண்ட்ரியாவின் நடிக்க வைக்க கமல் அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் இணையதள பக்கங்களில் உலா வருகிறது.