Leo Movie : தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது இந்த படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் பெரிய பட்ஜெட் படம் எடுத்து உள்ளீர்கள் உங்களுடைய படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இதற்கு முன்பு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே லியோ இதனை விட மரண மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். இவ்வாறு கலவை விமர்சனங்களுடன் முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானதினை அடுத்து இனி வரும் நாட்கள் விடுமுறை என்பதனால் கண்டிப்பாக வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏராளமான திரை பிரபலங்கள் லியோ படத்தினை தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் பார்த்துவிட்டு தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ரஜினி அடுத்து தற்போது உலகநாயகன் கமல் ஹாசனும் லியோ படத்தினை பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல் ஹாசனுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும் படத்தை பார்த்து முடித்ததும் கமல் ஹாசன் லியோ படம் குறித்து தனது கருத்தைத் தெரிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பல பெரிய திரை மற்றும் சின்னத் திரையினர் பார்த்து படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்கள் லியோ படத்தில் கடைசி காட்சியில் தனது குரலை மட்டும் கமல் ஹாசன் பதிவு செய்து இருந்தார்.