லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத வசூல் சாதனையை செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நிச்சயம் கேஜிஎப், பாகுபலி படங்களுக்கு நிகராகபடம் வசூல் வேட்டை நடத்தும் என பலரும் கூறி வருகின்றனர். இதுவரை உலக அளவில் மட்டுமே சுமார் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக இருந்தாலும் படம் சஸ்பென்ஸ் அதிகமாக இருந்ததால் அடுத்து என்ன என்ன என்பதை ரசிகர்களை எதிர்பார்க்க தூண்டிவிட்டது இதனால் தற்போது இந்த படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
கதைக்கு ஏற்றபடி நடிகர்களையும் சரியாக தேர்வு செய்துள்ளார் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், ஏஜென்ட் டினா என அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து உள்ளது இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஓடிக் கொண்டு இருந்த நடிகர் சம்பத். யூடியூப் சேனல் ஒன்றில் இந்த படம் குறித்து பேசியுள்ளார் அப்போது மலையாள நடிகர் பஹத் பாசில் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வரும் பகத் பாசில்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார் அப்படித்தான் விக்ரம் படத்தில் இருந்தது. கமல் நடிப்பைப்பார்த்து எப்படி நாம் மிரண்டு போயிருந்தமோ அதே போல கமலஹாசனும் பகத் பாசிலின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டு போனார் என அதில் தெரிவித்தார்.