சச்சின் டெண்டுல்கர் போலவே மாறிய உலகநாயகன் கமலஹாசன் – புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார் ரசிகர்கள்.!

kamal-

கமலஹாசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்திலேயே குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் ஹீரோ போன்ற கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்திலும் பின்னிப் பெடல் எடுத்து நடித்திருப்பார். பின்பு சினிமாவில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் என பலர் மத்தியிலும்..

நன்கு பரீட்சயமான பிறகு ஹீரோ ரோலை மட்டும் தேர்வு செய்து நடத்து அசத்தி உலகநாயகன் என்ற பட்டத்தை பெற்றார். கமலஹாசன் ஒரு சில நடிகர்கள் போல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாமல் தனது படங்களின் மூலம் மக்களுக்கு பல புதிய செய்திகளை கொடுத்தவர்.

தற்போது கூட கமலஹாசன் வயதாகி இருந்தாலும் நடிப்பில் இன்றும் இளமையாக இளம் நடிகர்களுக்கு இணையாக ஆக்ஷன் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது.

வருகின்ற நாட்களிலும் அதிக அளவு வசூலை ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து கமல் வேறு சில படங்களிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கமல் குறித்த செய்திகளும் சில புகைப்படங்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அப்படி தற்போது இளம் வயதில் கமலஹாசன் கிரிக்கெட் உடையணிந்து பேட்டுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்க்க பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் போல் காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

kamal
kamal
sachin