விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் அறிமுகமானவர் முகேன் ராவ். மேலும் இவர் பாஸ் சீசன்3 ல் வெற்றி பெற்றவர். இவருக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு பெண்கள் ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளது. உள்ளே உள்ள போட்டியாளர்களில் இவர் தான் மிகவும் எளிமையாகவும் மற்றவரிடம் அன்புடனும் நடந்து கொண்டார்.
இவர் சொன்ன அன்பு மட்டும் அனாதை என்கின்ற வார்த்தை அனைவரையும் கவர்ந்தது. இவர் குறும்படம் இயக்குவது பாடல் நடனம் என அனைத்திலும் வித்தை பெற்றவர்.தற்போது இவர் பல பிரபலங்களுடன் சேர்ந்து அறிவும் அன்பும் என்ற ஆல்பத்தை வெளியிடயிருக்கிறார். இந்த ஆல்பத்தில் இவருடன் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
பிக்பாஸ் முகேன் ராவ் உடன் சேர்ந்து லிடியன், சங்கர் மகாதேவன் ஸ்ருதிஹாசன், அனிருத், தேவிஸ்ரீபிரசாத், சித்தார்த், சித் ஸ்ரீராம் என பலர் பாட ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த அறிவும் அன்பும் என்ற ஆல்பத்தை உலகநாயகன் கமலஹாசன் நாளை வெளியிடுகிறார் எனவும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.