சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பெரும்பாலும் ஒன்றாக இணைந்து நடிக்க விரும்ப மாட்டார்கள் ஆனால் ரஜினி, கமலும் அதற்கு அப்படியே எதிர் மாறாக உள்ளவர்கள் வாய்ப்பு கிடைத்தால் இருவரும் ஒரே படத்தில் படம் பண்ணி உள்ளார்கள் இதுவரை மூன்று முடிச்சு, 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்பொழுதும் கூட வாய்ப்பு கிடைத்தால் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிப்பார்கள். ஆனால் தற்பொழுது இருவருமே தனித்தனியாக நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி கமல் கூறியது ஒரு சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது அதாவது 1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ரம்பா சௌந்தர்யாகி ஒரு நடிப்பில் வெளிவந்து..
வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம் இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார் இந்த படம் மிகவும் வித்தியாசமான கதைக்களம் படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்பொழுதும் கூட இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த திரைப்படம் அந்த அளவிற்கு மிக சூப்பராக இருக்கும்..
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து உள்ளார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவர் கூறியுள்ளது ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமலஹாசனுக்கு ரஜினிகாந்த் கேடயம் ஒன்றை வழங்கினார் இது குறித்து எழுந்த கேள்விக்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன்.
ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படத்தை கேரள மாநிலத்தில் வெளியிடும் உரிமையை கமலஹாசன் தான் வாங்கி இருந்தார் ஆதலால் அந்த திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது கமலுக்கு அந்த பரிசு கிடைத்தது என கூறினார்.. இந்த செய்தியை தற்பொழுது ரஜினி மன்றம் கமல் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.