உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஒரு வயதை எட்டிய பின்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.
மேலும் கமலஹாசனுக்கு என்று தனி நடிப்பு திறமை உள்ளது அவர் மற்ற நடிகர்கள் போல நடித்தோம் பணம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் அந்த கதாபாத்திரத்தில் தன்னை முற்றிலும் மாற்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பல நல்ல கருத்துகளை அவரது படங்களின் மூலம் தெரிவித்தவர்.
நடிப்பைத் தாண்டி கமலஹாசன் படங்களை இயக்குவது தயாரிப்பதும் பாடல்கள் பாடுவது போன்ற அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுபவர் ஆவார். இதனை தொடர்ந்து கமலஹாசன் சமீப காலமாக சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொழில் நிறுவனம் அரசியல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் படங்களில் தொடர்ந்து நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாகியது படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத அளவு வசூலை வாரி குவித்து வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் சமூக வலைதளப் பக்கங்களில் கமலஹாசனின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அதில் கமலஹாசன் கிரிக்கெட் உடை அணிந்து கிரிக்கெட் பேட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த ஸ்டில் இப்பதான் பார்க்குறேன் ஆண்டவர்👌👌 pic.twitter.com/JuPhHiesf2
— Depression Da mayiru (@Drunks_monkey) June 7, 2022