பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்டை இந்தியன் 2 திரைப்படத்திற்காக சந்தித்த கமலஹாசன்.!

kamal actor
kamal actor

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல் ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவருடைய நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் தற்பொழுது நடிகர் கமலஹாசன் ஹாலிவுட் நடிகை மெக்கென்சியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடிகை மெக்கென்சியின் தந்தை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர் ஆவார். இவருடைய திரைப்படங்களான இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் மேக்கப் ஆர்ட்டாக கமலஹாசனுடன் இணைந்து பணியாற்றி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில் மைக்கேல் வெஸ்ட்மோர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

தற்பொழுது அமெரிக்காவில் தங்கி வரும் கமல் மைக்கல் வெஸ்ட் மோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் மேலும் இவர்களுடைய சந்திப்பில் மெக்கென்சி கலந்து கொண்டுள்ள நிலையில் அவப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.மேலும் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

kamal hassan
kamal hassan

இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ராகுல் பிரதீப் சிங்,ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க உள்ளனர். மேலும் லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில் அவப்பொழுது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு கொரோனா மற்றும் படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சனைகள் வந்த காரணத்தினால் படப்பிடிப்புகளுக்கு தடை ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் சங்கர் ராம்சரனை வைத்து தெலுங்கு திரைப்படம் ஒன்றினை இயக்கி வருகிறார் மேலும் கமலஹாசனும் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் திரைப்படம் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அளித்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது என பல குழுவினர்கள் கூறியுள்ளார்கள் மேலும் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.