கமலஹாசன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் தற்போது வரையிலும் மிகவும் சுறுசுறுப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் செய்த காரியம் சூர்யா அவர்களை கண்கலங்க வைத்துள்ளது என இயக்குனர் லோகேஷ் ராஜ் அவர்கள் கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்டார் அப்பொழுது கமலஹாசன் கூறிய தகவல் ஒன்று சூரியாவை கண்கலங்க வைத்துள்ளது.
அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என ஏராளமான முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்த திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படம் ஜூன் 3தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது மேலும் இந்த கிளைமாக்ஸ்சில் சிறிய கதாபாத்திரத்தில் ரோலக்ஸ் சாராக நடித்திருந்தவர் தான் நடிகர் சூர்யா.
இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது இதன் காரணமாக ரோலக்ஸ் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றி பெற்ற காரணத்தினால் சூர்யாவுக்கு சப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் அவர்கள் சூர்யாவை சந்தித்துள்ளார் அப்பொழுது சூர்யாவின் கையில் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்யை கழற்றி சூரியாவுக்கு பரிசளித்துள்ளார்.
அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது இப்படிப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் வாட்ச் பற்றிய தகவலை பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார்.அதாவது கமல் சார் பரிசளித்தது புதிய வாட்ச் அல்ல, அவர் பல ஆண்டுகாலங்களாக பயன்படுத்தி வந்தது அவர் வாங்கிய முதல் காஸ்லியான வாட்ச் தான் அந்த ரோலக்ஸ் இவர் மனதிற்கு நெருக்கமான வாட்சும் கூட இவ்வாறு அந்த வாட்ச் கமலஹாசன் சாருக்கு எவ்வளவு முக்கியம் என்பது சூர்யா சார்க்கும் தெரியும்.
அதனால் அவர் அதனை பரிசாக அளிக்கும்போது சூர்யா சார் கண் கலங்கிவிட்டார் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.கமல் அண்ணன் மீதான அன்பால் பணம் வாங்காமல் விக்ரம் படத்தில் நடித்தார். இதன் காரணமாக தன்னுடைய அன்பு தம்பிக்கு விலை உயர்ந்த பொருளை பரிசாக வழங்கியுள்ளார்.