உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்திற்காக 150 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுவது திரைவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக பல வருடங்களாக வளம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் அவர்கள் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்கள் தந்து வருகிறார்.
முக்கியமாக கடைசியாக கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்த நிலையில் இதனை அடுத்து தொடர்ந்து பெரிய பட்ஜெட் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவே விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தினை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும், அதன் பிறகு எச் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த படங்களை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘பிராக்கெட் கே’ என்ற திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
எனவே இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் நடிப்பதற்காக 20 நாட்கள் கால் ஷீட் தர ஒப்புக்கொண்டதாகவும் பிக்பாஸ் தமிழ் 7 முடிந்ததும் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகிய பிரபலங்கள் நடிக்க இருக்கும் நிலையில் கமலஹாசன் அவர்களும் இணைந்து பான் இந்திய படமாக உருவாக இருக்கிறது. இவ்வாறு இவர்களைத் தொடர்ந்து சூர்யா, மகேஷ் பாபு, திஷா பதானி ஆகியோர்களும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.