வயசானாலும் சிங்கம் சிங்கம் தான் என நிருபித்த கமல்.! இந்தியன் 2 -வில் ஆண்டவர் எடுத்த ரிஸ்க்..!

indian-movie-2
indian-movie-2

தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் சில காலங்களாக கிடப்பில் கடந்த நிலையில் மீண்டும் சமீப காலங்களாக படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது அந்த வகையில் தற்பொழுது இந்தியன் 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று வரும் நிலையில் இதில் கமலஹாசனின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதற்காக கமலஹாசன் அவர்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் கமலஹாசன் அவர்கள் இந்த வெற்றினை தொடர்ந்து மூன்று வருடங்களாக கிடப்பில் கடந்த இந்தியன் 2 படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். இந்த படத்தை சங்கர் இயக்க லைக்கா நிறுவனம், ரெட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் கமலஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர்கள் நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடு மட்டுமல்லாமல் சென்னையிலும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது ஹாலிவுட் கலைஞர்களுடன் கமலஹாசனின் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்தில் கமல் தாத்தா கெட்டப்பில் நடித்திருந்த நிலையில் அதே போல் தற்பொழுது இந்தியன் 2 படத்திற்காக அவர் தாத்தா கேட்ட போட்டு இருக்கும் புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில் தற்பொழுது ஆந்திராவில் உள்ள திருப்பதியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

indian 2
indian 2

அதில் கமலஹாசனின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கும் நிலையில் ஷங்கர் இந்த காட்சியில் கமலின் லுக் வித்தியாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளாராம். அதற்காக தினமும் சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் மட்டுமே போட்டு வருகிறாராம் காலை அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடும் கமல் முதலில் ஜிம் ஒர்க் அவுட் முடித்துவிட்டு அதன் பிறகு மேக்கப் போட செல்கிறாராம்.

ஒரு மணி நேரம் ஜிம் ஒர்க் அவுட் 5 மணி நேரம் வரை மேக்கப் என படப்பிடிப்புக்கு முன்பே 6 மணி நேரம் செலவழித்து விடுகிறார். இவ்வளவு ரிஸ்க் எடுத்து மேக்கப் போட்டாலும் அது 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது இதனால் மறுநாள் தொடர்ச்சியாக இதே ஷூட்டிங் வேலை செய்து வருகிறார் இந்த வயதில் கமலஹாசன் இந்தியன் 2 படத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பதால் அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறவர்கள்.