ரசிகர்களுடன் அமர்ந்து “விக்ரம்” படத்தை பார்க்க போகும் உலக நாயகன் கமலஹாசன் – எந்த திரையரங்கில் தெரியுமா.?

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வார். தொடர்ந்து சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த கமல் திடீரென அரசியல் வியாபாரம் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வெற்றி பெற்று வருகிறார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே உடனடியாக விக்ரம் படம் எடுக்கப்பட்டது கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் விக்ரம் படத்தை தயாரித்துள்ளது.

படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ளது இருப்பினும் இந்த படத்திலும் தனது திறமையை நடிகர் கமல் சூப்பராக வெளிப்படுத்தியுள்ளார் இவரது நடிப்பை பார்த்த படக்குழுவினர் இந்த வயதில் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துகிறார் என கூறி வியந்து பார்த்தனர் ஆம் நிச்சயம் படம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து கொடுக்கும் எனவும் படக்குழு தொடர்ந்து கூறி வருகிறது.

படம் சிறப்பாக வந்துள்ளதால் மிகப்பெரிய அளவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது உலக அளவில் 5,000 திரையரங்குகளிலும் தமிழகத்தில் 1000 திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறதாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு ஒரு விருந்து அப்பொழுது இருக்கிறாராம் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது இதனையொட்டி சென்னை கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி திரையரங்கில் உலக நாயகன் கமலஹாசன் அதிகாலை 4 மணிக்கே வந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்க்க இருக்கிறாராம்.