80, 90 காலகட்டங்களில் ஹீரோவாக நடித்த பல நடிகர்கள் இப்பொழுது வெள்ளித் திரையில் அப்பா, சித்தப்பா மற்றும் முக்கிய குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் நடிகர் நாசர் பல படங்களில் நடித்து பட வாய்ப்பு அள்ளி வருகிறார் இப்பொழுது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கணம்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு டைம் டிராவலரை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது இந்த படத்தை குறும்படம் இயக்கி பிரபலமடைந்த ஸ்ரீ கார்த்திக் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கணம் படத்தில் நாசர் உடன் கைகோர்த்து ரித்து வர்மா, அமலா, எம் எஸ் பாஸ்கர், திலக் ரமேஷ், சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நாசர் சில விஷயங்களை போட்டு உடைத்தார் அதாவது அவர் சொன்னது என்னவென்றால் டைம் ட்ராவலர் படம் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லும் பொழுது எனக்கு மேம்போக்காக தெரிந்தது அதனால் பல சந்தேகங்கள் இருந்தது சாதாரணமாக சொல்லிவிடக்கூடாது..
மக்களுக்கு புரியும்படி நன்றாக இந்த படத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என இயக்குனரிடம் கேட்டேன் எனக்கும் இயக்குனருக்கும் பல வாக்குவாதங்கள் இந்த படத்தில் போனதாக அவர் கூறினார்.. நான் இந்த படத்தில் கிழவனாக நடிக்க வேண்டும் என்பதற்காக கிராஸ்தெட்டிக் மேக்கப் போட சொன்னார்கள் நான் மறுத்தேன் மேக்கப் போடவே இரண்டு மணி நேரம் ஆகும்.
முகத்தில் போட்டுக் கொண்டு நடிக்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது ஆனால் உலகநாயகன் கமலஹாசன் உடல் முழுவதும் மேக்கப் போட்டு கொண்டு நடிக்கிறார். அவர் ஒரு ஜீனியஸ்.. சிறந்த நடிகர் என நாசர் வெளிப்படையாக சொன்னார்..