இந்தியன் படப்பிடிப்பில் பிரபல இயக்குனரை திட்டிய கமலஹாசன் – தெறித்து ஓடிய மொத்த யூனிட்..

kamal
kamal

உலக நாயகன் கமலஹாசன் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் செம அசால்டாக நடித்து முடிக்க கூடியவர் அதை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.. இப்பொழுது கூட இந்தியன் 2 திரைப்படத்தில் ரொம்ப மெனக்கெட்டு வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை பெரிய அளவில் மக்கள் மன்றம் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் பிரம்மாண்ட பொருள் செலவில் இயக்கி வருகிறார் இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து சித்தார்த், ரகுல் புரட்சி காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இயக்குனர் வசந்த பாலன் இந்தியன் படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நகைச்சுவையாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்..

இந்தியன் படத்தில் ஷங்கருக்கு உதவி இயக்குனராக வசந்த பாலன் இருந்தார் ஒரு படத்தின் காட்சியை கமல் வைத்து எடுப்பதற்கு முன்பாக வசந்த பாலாவை வைத்து ஒரு முன்னோட்டம் பார்த்துவிடலாம் என கணக்கு போட்டு ஷங்கர் எடுத்து இருக்கிறார் அந்த காட்சி வேறு எதுவும் அல்ல..  சிபிஐ அதிகாரி நெடுமுடி  வேணு வந்து  கமல்  கையை கட்டிப்போட்டு விட குதித்து குதித்து சமையலறைக்குச் சென்று பின் கேஸ் சிலிண்டரை பத்த வைத்து தனது கைவிலங்கை கழட்டுவார் கமல்..

இதை வசந்த பாலனை வைத்து முதலில் செய்திருக்கிறார் அவர் ஒரே தாவாக தாவி உருண்டு சீக்கிரமா அந்த இடத்திற்கு சென்று விடுவார் இந்த காட்சியை நன்றாக இருக்கிறது என கருதி ஷங்கரும் கமலஹாசனை இப்படி நடிக்க வைத்து விடலாம் என கருதினாராம். உலகநாயகன் கமலஹாசனும் அந்த வயதான கெட்ட போட்டுவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார் உடனே ஷங்கர் இந்த கட்சியை சொல்ல அவர் நடித்தார்.

ஆனால் இவர் நடித்தது பொறுமையாக நகர்ந்து உருண்டு சென்று அந்த இடத்திற்கு போவார் இதை பார்த்த சங்கர் கட் செய்துவிட்டு வசந்தபாலனை மீண்டும் நடிக்க சொல்லி இருக்கிறார் அவர்  ஒரே தாவாக தாவி உருண்டு சமையல் அறைக்குச் சென்று கைவிலங்கை கழட்டினாராம் இதை பார்த்த கமலுக்கு செம்ம கோபம் வந்துவிட்டதாம் ஒரு வயதானவர் எப்படி இப்படி செய்வார் என கூறி வசந்த பாலனை திட்டி விட்டாராம்.. இதனால் அங்கிருந்த ஷங்கர் வசந்தபாலன் என அனைவரும் தெறித்து ஓடிவிட்டனராம் மேலும் இந்தியன் படப்பிடிப்பு முடியும் வரை கமலஹாசன் வசந்தபாலன் மீது கோபமாகவே இருந்தாராம்.. இதனை வசந்த பாலன் சமீபத்திய பேட்டியில் சொல்லினார்.