kamal haasan : நடிகை கஸ்தூரிக்கு தற்பொழுது 49 வயதாகிறது இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அது மட்டும் இல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகிறார் நடிகை கஸ்தூரி சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு மிகவும் தைரியமாக குரல் கொடுக்க வருபவர் அந்த வகையில் இவர் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக பேசி அடிக்கடி தலைப்பு செய்தியில் இடம் பெற்று விடுகிறார்.
நடிகை கஸ்தூரி 1992 இல் மிஸ் சென்னை பட்டத்தை வென்றார் அதே ஆண்டு பெமினா மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்ற கஸ்தூரி ,மிஸ் சென்னை பட்டத்தை வென்ற பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது பிறகு 1991 ஆம் ஆண்டு ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பை தொடங்கினார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியன் திரைப்படத்தில் கமலஹாசனின் சகோதரியாக நடித்து ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இப்படி இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது ஒரு பக்கம் தமிழில் நடித்து வந்தாலும் மற்றொரு பக்கம் தெலுங்கில் நாகர்ஜுனா அன்னமய்யா படத்தில் கஸ்தூரி நடித்த பிரபலம் அடைந்தார் 2009 ஆம் ஆண்டு மாலை மாலை என்ற திரைப்படத்திலும் மீண்டும் நடிக்க வந்தார்.
பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 3 வைல்ட் கார்டு என்ட்ரி ஆக போட்டியளராக உள்ளே நுழைந்தார் மேலும் இவர் ஸ்டார் மா என்ற தொலைக்காட்சியில் தெலுங்கில் ஒரு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் கஸ்தூரி இடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அந்த வகையில் பிகினி புகைப்படம் பற்றி அவர் கூறியுள்ளார்.
சொத்துக்காக அப்பத்தாவை எரிய விட்டுவிட்டாரா குணசேகரன்.? கதறி அழும் ஜனனி
அதாவது இந்தியன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக பிகினி உடையில் போட்டோ சூட் நடத்திய அந்த புகைப்படத்தை சங்கருக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இந்தியன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகியாக நடிக்கும் அந்த வாய்ப்பை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என கஸ்தூரி விரும்பியதாகவும் அதனால்தான் இயக்குனருக்க அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆனால் அந்த வாய்ப்பு ஊர்மிலாவிடம் சென்றது அப்பொழுது நான் இளமையாக தான் இருந்தேன் அந்த கதாபாத்திரத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என நினைத்தேன் அந்த நேரத்தில் ரங்கீலா வெளியானது அப்பொழுது ஊர்மிளாவின் புகழ் மேலோங்கி வளர்ந்தது அதனால் அவருக்கு அந்த கதாபாத்திரம் சென்று விட்டது எனக் கூறியிருக்கிறார்.