முன்னணி நடிகைகளுடன் நீச்சல் உடையில் கமலஹாசன்.! முன்னாள் மனைவிக்கு பாராட்டு..

kamal-hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் அவர்கள் தற்பொழுது வயதானாலும் கூட தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து கொஞ்சம் கூட சுறுசுறுப்பு குறையாமல் நடித்த வருகிறார். அந்த வகையில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் மிகப்பெரிய வெற்றினை கண்ட நிலையில் இந்த படமும் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்பொழுது இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வர இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நீச்சல் உடை காஸ்டி உங்களை சிறப்பாக வடிவமைத்து இருக்கும் காஸ்ட்யூம் டிசைனரான கமலஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் அதனை நடிகை ராதா தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதாவது கமலஹாசன் ராதா, மாதவி, ஸ்வப்னா ஆகியோர்களுடைய நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டிக் டிக் டிக். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகிகளாக ராதா, மாதவி மற்றும் ஸ்வப்னா மூவரும் நடித்திருந்த நிலையில் அந்த காலத்திலேயே நீச்சல் உடையில் தோன்றியிருந்தார்கள் அது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

kamal wife
kamal wife

இந்நிலையில் கமலஹாசன் மாதவி மற்றும் ஸ்வப்பனாவுடன் இருக்கும் நீச்சல் உடை புகைப்படத்தை பதிவு செய்துள்ள ராதா தனது மலரும் நினைவுகளை குறிப்பிட்டுள்ளார்.. அதாவது டிக் டிக் டிக் படத்தின் படப்பிடிப்பின் பொழுது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளில் இதுவும் ஒன்று.. நீச்சல் உடையை அணிவது அப்பொழுது வேலையின் ஒரு பகுதியாக இருக்கலாம்..

kamal hassan 1

ஆனால் நாங்கள் அப்பொழுது சந்தித்த போராட்டங்கள் அதை வலிமையால் சமாளித்த விதத்தினை பார்த்து எங்களை நாங்களே பாராட்டி கொள்கிறோம் குறிப்பாக மாதவிக்கு தனது சிறப்பு பாராட்டுகள் சில நினைவுகள் இப்பொழுது திடீரென வந்தால் அதை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் குறிப்பாக எங்கள் ஆடை வடிவமைப்பாளர் வாணி கணபதியின் அழகான ஆடை வடிவமைப்பிற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.