சமீபகாலமாக டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளி வந்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை எந்த ஒரு திரைப்படமும் நடத்தவில்லை ஆனால் நடிகர் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று..
சுமார் 380 கோடிக்கு மேல் வசூல் செய்து பயணித்துக் கொண்டிருக்கிறது. வெகுவிரைவிலேயே 400 கோடியை தொடும் என கூறப்படுகிறது இதனால் கமல் மற்றும் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தேவர்மகன்-2, இந்தியன் 2 படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த நடிகர் மாதவன். இப்போது இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராக்கெட்டரி. இந்த படம் வெளியாக ரெடியாக இருக்கிறது.
இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பலரையும் கவர்ந்து விட்டது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் மாதவன் கமல் குறித்து பேசியுள்ளார். நிருபர் ஒருவர் நீங்களும் கமலும் நல்ல நண்பர்களா என கேட்டனர் அதற்கு மாதவன் சொன்னது.
கமலை என் நண்பன் என சொல்லுவது பெரிய தப்பு அவர் எவ்வளவு ஒரு பெரிய ஜீனியஸ் அவரை பின்பற்றி வந்தவர்கள் தான் நாங்கள் அவருடைய ரசிகன் என்று தான் சொல்லவேண்டும். நண்பன் என கூற கூடாது என தன் வாயில் அடித்துக் கொண்டார். உலகநாயகன் கமலஹாசன்னும், மாதவனும் மூன்று படங்களில் சேர்ந்து நடித்து அசத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.