தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள ஏராளமான தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்தான் விக்ரம். தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தில் எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்று உண்மை தகவலை சொன்ன வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள திரைப்படம்தான் விக்ரம். இத்திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைப்பில் உருவான.
மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், கமல்ஹாசனின் மூவரின் நடிப்பும் மிகப் பெரிய அளவில் ரீச்சாகி உள்ளதால் வசூல் கோடி கணக்கில் இருந்து வருகிறது. இத்திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி அன்று வெளியான நிலையில் ஒரே நாளில் 40 கோடி ரூபாயும், மூன்று நாளில் 100 கோடி ரூபாயும், ஒரு வாரத்தில் 600 கோடி ரூபாயும், 10 நாட்களில் 300 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக இணையதளத்தில் செய்திகள் வெளியானது.
மேலும் இவ்வாறு வசூல் கணக்குகள் இணையதளத்தில் வைரலாக அதை அதிகாரப்பூர்வமாக ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. இதன் காரணமாக சமீப பேட்டி ஒன்றில் பேசிய கமலஹாசன் ‘தன்னை நடிக்க விட்டால் 300 கோடி சம்பாதிப்பேன் என்றும் அது உண்மை என்பதை விக்ரம் படத்தின் வசூல் நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து நான் நன்றாக சாப்பிடுவேன் என்றும், என்னுடைய கடனையடைப்பேன் என்றும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பேன் என்றும், ஒருவேளை கொடுக்க பணம் இல்லை என்றால் இல்லை என்று தைரியமாக கூறுவேன் என்றும், எனக்கு வல்லவன் படத்தில் நம்பிக்கை இல்லை என்றும் மனிதனாக இருப்பதே போதுமானது என்றும் பேசியுள்ளார்.
மேலும் அவருடைய பேச்சில் என்னை நடிக்க விட்டால் 300 கோடி சம்பாதிப்பது என்று கூறியதை அடுத்து விக்ரம் படம் 300 கோடி வசூல் செய்ததாக உறுதி செய்துள்ளதாக கருதப்படுகிறது. இவ்வாறு கமலஹாசன் மிகவும் ஆக்ரோஷமாக இந்த அனைத்து பதில்களையும் கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் கமலஹாசனை விமர்சனம் செய்தவர்களுக்கு இவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்று கருதக்ப்படுகிறது.